![]() |
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை |
மேஷ லக்னத்திற்கு சூரியன்
மேஷ லக்னம் என்பது கால புருஷனின் முதல் வீடு. இந்த வீட்டின் அதிபதி செவ்வாய். இப்போது மேஷ லக்னத்திற்கு சூரிய தசை பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே ஒரு லக்னத்திற்கு யோகத்தை அள்ளி கொடுப்பவர்கள் அந்த லக்னத்திற்கு திரிகோண ஸ்தானமான 1,5,9ம் இட அதிபதிகள்.
அவர்களே லக்னாதிபதிக்கு நண்பர்களாகவும் இருப்பார்கள். அந்த வரிசையில் மேஷ லக்னத்திற்கு 5ம் இட அதிபதியாகிய சிம்ம வீட்டின் அதிபதி சூரியன் மிகுந்த யோகத்தை தரக் கூடியவர்.
செவ்வாய்க்கு மிகவும் நட்பு கிரகம் சூரியன். எனவே சூரிய தசை எந்த ஒரு நிலையிலும் மிகவும் நல்ல பலன்களை மேஷ லக்னத்திற்கு அளிக்கும்.
சூரிய தசை என்பது 6 வருட காலங்கள் நடக்க கூடியது. இருக்கக் கூடிய தசைகளிலே மிகவும் குறைந்த வருடங்கள் கொண்டது சூரிய தசை.
சூரியன் நமது ஜாதகத்தில் நன்றாக இல்லை, கெட்டு இருந்தாலும் கூட பெரிய தீமைகளை செய்ய மாட்டார்கள். ஆனால் சூரியனின் யோக பாக்கியங்கள் குறையும்.
சூரியன் என்பது அரசு, அரசு சார்ந்த தொழில்கள், தந்தை மற்றும் அரசாங்கத்தை குறிக்க கூடிய கிரகம்.
எனவே சூரியன் நன்றாக வலுவாக இருந்தால் சூரிய தசையில் அரசாங்கம் மூலம் ஆதாயம், அரசு வேலை போன்றவை அமைய வாய்ப்பு உள்ளது.
சூரியன் என்பவர் ஒரு அரை சுபர் அரை பாபர். சூரியன் மற்ற சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை இல்லாமல் இருந்தால் சூரிய தசையில் நல்ல பலன்களை தான் செய்யும்.
பொதுவாக சூரிய தசை என்பது மேஷ லக்ன காரர்களுக்கு இவ்வளவு சீக்கிரம் 6 வருடங்கள் போய் விட்டதே என்று நினைக்க வைக்க கூடிய ஒரு அற்புதமான தசை என்றே கூறலாம்.
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை
அதற்கு 5ம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தால் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் சனியின் 10ம் இடத்தை தொடர்பு கொண்டால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சூரியனும் சனியும் சேர்வது நல்லதல்ல.
5ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம் என்பதால் நாம் செய்த புண்ணியத்தின் பலனை தர செய்வார்.
நல்ல புத்திர பாக்கியம் கிடைக்கும். அந்த குழந்தைகளின் மூலம் நல்ல பேர், புகழ் கிடைக்கும். அவர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
குரு, வளர்பிறை சந்திரன், தனித்த புதன், சுக்கிரன் கூட தொடர்பில் இருந்தால் நல்ல பலன்கள் தான் கிடைக்கும்.
சுக்கிரன் எதிரணி கிரகம் என்றாலும் சுக்கிரன் சுப கிரகம் என்பதாலும் சுக்கிரன் சூரியனின் முக்கூட்டு கிரகம் என்பதாலும் சூரியனுடன் சேர்க்கை பெற்றால் நல்ல பலன் தான் கிடைக்கும்.
குருவின் பார்வை சேர்க்கை பெற்றால் சிவராஜ யோகம் உண்டாகி மிகவும் நல்ல பலன் உண்டாகும். அதுவும் ஆட்சி உச்சம் பெற்று பார்த்து விட்டால் இன்னும் வலுவாக நல்ல பலனை செய்யும்.
அதே போல சூரியன் அமரும் இடமும் சூரியனுக்கு நட்பு, ஆட்சி உச்ச வீடாக இருக்க வேண்டும். நீசம், பகை பெற்றால் நல்ல பலன்கள் குறையலாம்.
அதுமட்டும் இல்லாமல் சூரியன் எந்த சாரத்தில் உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். சாரத்தின் அடிப்படையில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சில நேரம் அந்த தசை சூரியன் நின்ற சாரத்தின் அடிப்படையிலும் வேலை செய்யும்.
ஆனால் முழுதாகவோ சாரத்தின் அடிப்படையில் மட்டுமே வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்க.
எனவே சூரியன் நின்ற சார நாதன் சுப கிரகமாக இருக்க வேண்டும் அல்லது சூரியனின் நட்பு கிரகங்களின் சாரத்தில் இருப்பது உன்னத நிலை.
என்ன தான் சூரியன் வலுவாக இருந்தாலும் மேஷ லக்னத்தின் அதிபதி செவ்வாயும் ஓரளவு வலுவாக இருக்க வேண்டும்.
அப்போது தான் அனைத்து பலன்களும் நல்ல முறையில் நம்மை வந்து சேரும்.
ஆகவே சூரியன் வலுவாக இருந்தால் ஒருவருக்கு நல்ல தன்னம்பிக்கை உருவாகிறது.
அதன் பின்பு அவரின் லக்னாதிபதி, 2ம் அதிபதி, 10ம் அதிபதி போன்ற மற்ற பாகங்களை பொறுத்து அவரின் செல்வ நிலை, அதிகார நிலை அமைகிறது.
எனவே சூரியன் மட்டுமே நன்றாக இருப்பது முக்கியம் அல்ல. மற்ற கிரகங்களும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். எனவே ஒளிகளை தரக்கூடிய சூரியன் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். மேலும் சுப கிரகங்கள் குரு, சுக்கிரன் வலுவாக அமைந்து விட்டால் அது யோக ஜாதகம் ஆகி விடுகிறது. எனவே அனைத்தையும் பார்த்து தான் பலன் கிடைக்கும்.
சரி இப்பொழுது சூரியன் 12 வீடுகளிலும் இருக்க மேஷ லக்னத்திற்கு சூரிய தசை எப்படி அமையும் என்று பார்க்கலாம்.
![]() |
12 வீடுகளிலும் சூரியன் இருக்க சூரிய தசை |
மேஷ லக்னத்திற்கு (லக்னத்தில் சூரியன்)
மேஷ லக்னத்திற்கு குழந்தைகளையும் அதிர்ஷ்டமும் கொடுக்க கூடிய 5ம் அதிபதி லக்னத்தில் உச்ச நிலையில் இருப்பது நல்லதல்ல.
என்ன தான் இருந்தாலும் சூரியன் அரை பாவர். மேஷ வீட்டில் அவர் உச்சம் அடைந்து ஸ்தான பலம் பெறுவது பெரிய யோகம் பலனை செய்யாது.
அதுவே குரு, சுக்கிரன் உடன் சேர்க்கை பெற்று சுபத்துவம் அடைந்தால் நல்ல பலன்களை தரும். அதே போல சனி ராகு தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லது.
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை (2ம் வீட்டில் சூரியன்)
மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரனின் ரிஷப வீடு. இங்கு சூரியன் இருக்கும்போது சுக்கிரனின் வீடு என்பதால் சுபத்துவம் பெறுகிறார்.
தன்னுடைய 5ம் வீட்டிற்கு 10ம் இடத்தில் இருக்கிறார். இங்கு சூரியன் இருப்பது மிகப் பெரிய நல்ல யோக அமைப்புகளை செய்யும்.
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை (3ம் வீட்டில் சூரியன்)
மேஷ லக்னத்திற்கு 3ம் வீடாகிய புதனின் வீட்டில் சூரியன் இருக்கும்போது ஓரளவு நல்ல பலன்களை தரும். இது சூரியனின் சம நிலையான ஒரு வீடு.
3ம் வீடு என்பது உப ஜெய ஸ்தானம் என்று அழைக்க கூடிய 3,6,10,11இல் சூரியன் இருப்பது நல்லது தான்.
அதோடு தன்னுடைய சிம்ம வீட்டிற்கு 11ம் இடமாகிய இந்த வீட்டில் சூரியன் இருக்க நல்ல பலன்கள் அமையும்.
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை (4ம் வீட்டில் சூரியன்)
மேஷ லக்னத்திற்கு சூரிய தசை 4ம் வீட்டில் சூரியன் இருக்க எப்படி இருக்கும் என பார்க்கலாம்.
4ம் வீடு சந்திரனின் கடக வீடு. இங்கு சூரியன் இருப்பது தன்னுடைய வீட்டிற்கு 12இல் மறைந்தாலும் அது சூரியனின் நண்பர் சந்திரனின் வீடு.
இங்கு சந்திரனின் ஒளி தன்மையை பார்க்க வேண்டும். ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் ஆக இருந்தால் சூரியன் இந்த இடத்தில் இருக்கும்போது நல்ல பலன்களை செய்யும்.
அதுமட்டும் இல்லாமல் 4ம் இடத்தில் உள்ள சூரியன் நேரிடையாக 7ம் பார்வையாக தொழில் ஸ்தானம் என்ற 10ம் வீட்டை பார்ப்பார் என்பதால் மிகவும் நல்ல தொழில் அமைப்புகள் அமையும்.
நல்ல தொழில் அமைய வேண்டும் என்றால் சூரியன் நன்றாக இருக்க வேண்டும். அவரே தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல தொழில் அமையும்.
இதுவே சூரியன் பாவ தொடர்புகள் பெற்று விட்டால் இந்த பலன்கள் மாறும். அமாவாசை சந்திரனாக உள்ள சந்திரன் வீட்டில் சூரியன் இருந்தாலும் பலன் மாறும்.
5ம் வீட்டில் சூரியன்
மேஷ லக்னத்திற்கு 5ம் வீடு சிம்ம வீடு. சொந்த வீட்டிலேயே சூரியன் ஆட்சி ஆகி இருப்பது பாதி நன்மை பாதி தீமை.
திரிகோண ஸ்தானமான 5இல் சுப கிரகம் இருப்பது நல்லது. எனவே அரை பாவர் அங்கு இருக்கும்போது பாதி நன்மையை அளிப்பார்.
இங்கு சூரியன் எந்த சாரத்தில் உள்ளது என்பதை பொறுத்தும் அதன் பலன் அமைகிறது.
அதுவே சூரியன் குருவின் பார்வை பெற்று சுபத்துவ நிலையில் அல்லது சுக்கிரனை அஸ்தங்க படுத்தி சுபத்துவ நிலையில் இருக்கும்போது மிகவும் நல்ல பலன்களை தரும்.
6ம் வீட்டில் சூரியன்
மேஷ லக்னத்திற்கு 6ம் வீடாகிய புதனின் கன்னி வீட்டில் சூரியன் இருப்பது நல்லதல்ல.
உபஜெய ஸ்தானங்களில் இருப்பது நல்லது என்று சொல்லி இருந்தாலும் அது இங்கே செல்லாது.
ஏனெனில் 5ம் அதிபதி முக்கியமான கிரகம், அது எப்பொழுதும் மறைய கூடாது. இங்கு 5ம் அதிபதி 6இல் மறைவது நல்ல பலனை தராது.
எனவே 5ம் இடத்தின் பலன்களை நல்ல முறையில் தராது. இப்படி 5ம் அதிபதி 6இல் மறையும் போது, தான் பெற்ற குழந்தையை பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத நிலை உருவாகலாம்.
இந்த நிலையில் குருவும் கெட்டு விட்டது என்றால் குழந்தையை விட்டு பிரிந்து போகுதல் நடக்கலாம்.
இருந்தாலும் வீடு கொடுத்த புதன் பரிவர்த்தனை அல்லது சுபத்துவம் பெற்று இருந்தால் சில நல்ல பலன்கள் நடக்கும்.
7ம் வீட்டில் சூரியன்
மேஷ லக்னத்திற்கு 7ம் வீடாகிய சுக்கிரனின் துலாம் வீட்டில் சூரியன் இருக்கும் போது நீசம் அடைகிறார்.
நீசம் அடைந்தாலும் அது சுக்கிரனின் சுப வீடு. இங்கு சுக்கிரன் தொடர்பு பெற்றால் பெரிய தீமைகள் நடக்காது. லக்னத்தை இங்கிருந்து பார்ப்பார்.
ஓரளவு நல்ல பலன்களை தருவார். ஆனால் சனியின் பார்வை ராகுவின் இணைவு பெற்றால் தீய பலன்கள் வந்து விடும்.
இங்கு சூரியன் நீசம் அடைவதால் தன்னம்பிக்கை இல்லாத நிலையை உருவாக்கும்.
8ம் வீட்டில் சூரியன்
மேஷ லக்னத்திற்கு 8ம் வீடு செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிகம். இது சூரியனின் நண்பரின் வீடு.
5ம் அதிபதி லக்னத்திற்கு 8இல் மறைந்தாலும் கூட அவருடைய 5ம் வீட்டிற்கு 4இல் கேந்திரத்தில் தான் இருக்கிறார்.
நண்பரின் வீட்டில் தான் இருக்கிறார். எனவே ஓரளவு நல்ல பலனை தருவார். சில நேரங்களில் சாதகமற்ற பலனை தருவார்.
ஆனால் பெரிய கெடுதல்கள் நடக்காது. 8இல் மறைவது சூரியனின் காரகத்துவம் சில அடிபடலாம். தந்தைக்கு சாதகமில்லாத அமைப்பு.
தலைமை பதவிக்கு சாதகம் இல்லை. மற்ற படி தனக்கு பிடித்த நண்பரின் வீட்டில் இருப்பதால் சில நல்ல பலன்கள் கிடைக்கும்.
9ம் வீட்டில் சூரியன்
மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு. 5ம் அதிபதி திரிகோணத்தில் இருக்கிறார்.
சுபரின் வீட்டில் நெருங்கிய நண்பரின் வீட்டில் இருக்கிறார். தனது 5க்கு 5ம் வீட்டில் இருக்கிறார். இங்கு சூரியன் இருப்பது நல்ல பலன்களை அளிக்கிறது.
அதுவும் செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால் இன்னும் நல்ல பலன்களை தரும். எந்த இடத்திலும் சனி, ராகு தொடர்பு இருந்து விட கூடாது என்பதை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.
10ம் வீட்டில் சூரியன்
இது சனியின் மகர வீடு. தனது எதிரியின் வீடு. இங்கு சூரியன் இருக்க கூடாது என்றாலும் அதை ஈடு கட்டும் அளவிற்கு இங்கு சூரியன் திக் பலம் அடைகிறார்.
எனவே சூரியன் இங்கு இருப்பது மிகவும் நல்ல மேன்மையான அமைப்பு. ஆனால் சனியின் சேர்க்கை இருந்து விட கூடாது.
மீறி இருந்தால் நல்ல பலன்கள் குறையும். வேலைக்காரர்களால் பிரச்சினை போன்ற அமைப்புகள் உருவாகும்.
அதே நேரத்தில் இந்த சனி, சூரியன் சேர்க்கையை குரு பார்த்தால், அல்லது சுக்கிரன் சேர்க்கை பெற்றால் குறைந்த பலன்கள் அதிகரித்து விடும்.
இந்த சுபத்துவம் சனி, சூரியனை சண்டை போட விடாமல் வைத்து நல்ல பலன்களை கொடுக்கும்.
11ம் வீட்டில் சூரியன்
கும்ப வீட்டில் சூரியன். இதுவும் சனியின் வீடு தான். இருந்தாலும் தன்னுடைய 5ம் வீட்டை நேரிடையாக பார்க்கிறார்.
இங்கு சூரியன் திக் பலத்திற்கு அருகில் இருக்கிறார். 5ம் வீட்டை பார்த்து 5ம் வீட்டை வலு படுத்துகிறார்.
அதே நேரத்தில் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் அந்த 5ம் வீட்டை தொடர்பு கொள்ளும் போது அந்த 5ம் வீடு சுபத்துவம் அடைகிறது. சனி ராகு தொடர்பு இருக்க கூடாது.
செவ்வாய் தொடர்பு பெற்றால் அதிகாரம் கிடைக்கும். எனவே 11ம் வீட்டில் சூரியன் இருந்து 5ம் இடமும் சுபத்துவம் அடைந்தால் மிகவும் நல்ல பலன்களை அளிக்கிறது.
12ம் வீட்டில் சூரியன்
இது கால புருஷ தத்துவத்தின் படி கடைசி வீடான குருவின் மீனம் வீடு. இருந்தாலும் இங்கு சூரியன் தனது 5ம் வீட்டிற்கு 8இல் மறைந்தும், லக்னத்திற்கு 12இல் மறைந்தும் இருப்பார்.
அப்போது 5ம் இடத்தின் அதிர்ஷ்டம், குழந்தைகள் போன்ற சில குறைகள் இருக்க தான் செய்யும்.
இருந்தாலும் பெரிய கெடுதல்கள் நடந்து விடாது. ஏனெனில் இது குருவின் சுபத்துவ வீடு என்பதால் பெரிய கஷ்டங்கள் வந்து விடாது.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments