banner 728*90

மேஷ லக்னத்திற்கு குரு தசை எப்படிப் பட்ட பலனை தரும்

மேஷ லக்னத்திற்கு குரு தசை எப்படி இருக்கும்
மேஷ லக்னத்திற்கு குரு தசை

    செவ்வாயின் நண்பர் குரு பகவான்


    மேஷ லக்னத்தின் லக்னாதிபதி செவ்வாய் ஆகும். செவ்வாயின் நல்ல நண்பர் குரு. மேஷ லக்னத்திற்கு குரு தசை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    மேஷத்திற்கு திரிகோண ஸ்தான அதிபதிகள் எப்பொழுதும் யோகத்தை தான் செய்வார்கள் என்றாலும் 12ம் வீட்டிற்கும் குருவே அதிபதி ஆகிறார்.

    எனவே சில தீமைகளும் செய்ய வாய்ப்புள்ளது. 12ம் இடம் முழுமையான மறைவு ஸ்தானம் இல்லை, பாதி மறைவு ஸ்தானம் ஆகும்.

    அதனால் அந்த அளவுக்கு பெரிய கெடுதல்கள் செய்ய மாட்டார். அவர் 12ம் இடத்தோடு தொடர்பு பெறாமல் இருந்தால் நல்ல பலன்கள் நடக்கும்.

    குரு தசை என்பது மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். குரு என்பவர் தன காரகன், புத்திர காரகன் என்பதால் இந்த தசையில் நல்ல பண வரவு, பொருளாதார மேன்மை, சொத்து சேர்க்கை, நல்ல குழந்தை பாக்கியம் போன்றவை கிடைக்கும்.

    ஏற்கனவே குழந்தை உள்ளவர்களுக்கு அந்த குழந்தைகளால் நல்ல பேர், புகழ், வளர்ச்சி உண்டாகும். 

    மேஷ லக்னத்திற்கு குரு தசை


    குரு 9ம் இடத்தின் அதிபதி பாக்கியாதிபதி என்பதாலும் அவர் முழு இயற்கை சுப கிரகம் என்பதாலும் எல்லா விதமான பாக்கியங்களும் கிடைக்க செய்வார். மனிதனுக்கு தேவைப்படும் அனைத்தும் கிடைக்கும். 

    குரு 12ம் இடத்திற்கும் அதிபதி ஆவதால் 12ம் இடத்தின் ஆதிபத்தியங்களும் நடக்கும். எதிர்பாரா அதிர்ஷ்டம், வெளிநாடு வெளி மாநிலம் சென்று பிழைத்தல், பங்குச் சந்தை, லாட்டரி போன்ற அமைப்புகளும் நடக்கும்.

    இவர் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் நல்ல பண வரவை உண்டு பண்ணுவார். 

    பணம் அதிகம் புழங்க கூடிய வங்கி துறை போன்ற இடங்களில் வேலை கிடைக்க செய்வார்.

    இந்த தசையில் திருமணம் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உருவாகும்.

    தந்தையை குறிக்க கூடிய 9ம் இடத்தின் அதிபதி என்பதால் தந்தைக்கு நல்ல ஒரு நிலை உருவாகும். தந்தையால் மேன்மை, தந்தை தொழிலுக்கு மேன்மை உண்டாகும்.

    இவர் 12ம் அதிபதி அதாவது விரைய ஸ்தானத்திற்கு அதிபதி என்பதால் அதிக செலவுகளும் உருவாகும். ஆனால் அது சுப செலவுகளாக இருக்கும்.

    வீடு மனை வாங்குதல், சுப நிகழ்ச்சி செய்தல் போன்ற நல்ல செலவுகள் உருவாகும். அதற்கு குரு நல்ல நிலையில் ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும்.

    இல்லையென்றல் கேந்திர ஸ்தானத்தில் இருக்க வேண்டும். மற்ற சுப கிரகம் பார்வை குருவின் மேல் விழுந்தாலும் நல்ல பலனை தரும்.

    குரு இருக்கும் சாரம் சுப கிரகமாக இருப்பது எல்லாம் அடுத்தடுத்த நிலைகளில் பார்க்க வேண்டும். 

    குரு, ராகு கேதுவோடு மிக குறைந்த பாதையில் இணைந்து இருப்பது எதிலும் சில தடைகளை ஏற்படுத்தலாம்.

    அதேபோல சனியோடு இணையும் போதும் குருவின் பலன்கள் குறையும். செவ்வாய் முக்கால் பாவர் என்றாலும் செவ்வாயோடு இணைந்தால் அந்த அளவுக்கு பலன் குறையாது. நல்ல பலன்கள் தான் கிடைக்கும்.

    குரு இருக்கும் வீட்டின் அதிபதியும் வலுவாக இருப்பது மேலும் நன்மை. குரு இருக்கும் சார நாதனும் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    குரு சூரியனுடன் மிக குறைந்த பாதையில் இணைந்தால் அஸ்தங்கம் ஆகி இருந்தால் குருவின் பலம் குறைந்து அதன் பலன்கள் குறையலாம்.

    அதே நேரத்தில் சூரியன் சுபத்துவம் பெற்று நல்ல அதிகாரத்தை கொடுக்கும். அதேபோல குரு வக்கிரம் ஆகாமல் இருக்க வேண்டும்.

    வக்கிரம் ஆனால் இயல்புக்கு மாறான பலனை செய்வார். அதுவே நீசம் பெற்று வக்கிரம் அடைந்தால் நல்லது. ஆட்சி உச்சம் பெற்று வக்கிரம் அடைவது முழு பலன் கிடைக்காது. 

    சரி ஒவ்வொரு வீட்டிலும் குரு இருக்க மேஷ லக்னத்திற்கு குரு தசை எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

    12 வீடுகளிலும் குரு இருக்க குரு தசை எப்படி இருக்கும்
    12 வீடுகளிலும் குரு இருக்க குரு தசை பலன்

    மேஷ லக்னத்திற்கு குரு தசை (லக்னத்தில் குரு)


    மேஷ லக்னத்தில் குரு இருப்பது மிக அருமையான அமைப்பு. நண்பரான செவ்வாயின் வீடு. 9ம் அதிபதி லக்னத்தில் இருக்கிறார்.

    எனவே செவ்வாயின் வீரம் விவேகமாக மாறும். நல்ல மனிதனாக இருப்பான். நல்ல கணிவு, துடிப்பான ஆளாக இருப்பான்.

    நியாயமான கோவக் காரன். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு வலிமை அதிகம்.

    குரு லக்னத்தில் இருந்தால் 5ம் இடமாகிய புத்திர ஸ்தானம், 7ம் இடமாகிய களத்திர ஸ்தானம், 9ம் இடமாகிய பாக்கிய ஸ்தானம் போன்றவைகளை பார்ப்பார்.

    பிறக்கும்போதே செல்வாக்கோடு சாகும் வரை அப்படியே நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் தூணாகிய 1,5,9ம் இடம் வலுவாக இருக்க வேண்டும்.

    அப்படி குரு லக்னத்தில் இருந்து 5,9ம் இடங்களையும் வலு பெற செய்வார். நல்ல பண வரவு இருக்கும். செய்யும் முயற்சிகள் நல்ல முறையில் நடக்கும்.

    ஆக இங்கு லக்னத்தில் குரு இருக்கும்போது திக் பலமாக இருப்பார், நட்பு வீட்டில் இருக்கிறார். எனவே நல்ல மேன்மையான பலன்களை தருவார்.

    இங்கு இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால் இன்னும் நல்லது. குரு திசை வந்தே ஆக வேண்டும்.

    மேஷ லக்னத்திற்கு குரு தசை (2ம் வீட்டில் குரு)


    மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரனின் ரிஷப வீடு. இங்கு குரு பகை பெற்றாலும் கூட அது ஒரு சுபரின் வீடு.

    எதிரியாக இருந்தாலும் அவன் நல்லவனுடைய வீடு என்பதால் பெரிய கஷ்டங்கள் இருக்காது.

    குருவே இங்கு சுபத்துவம் அடைந்து 6,10ம் இடங்களை பார்த்து அந்த இடத்தை வலு பெற செய்வார். இங்கு குரு இருப்பது நல்லது தான்.

    இருந்தாலும் ராகு, சனி இணைவு வந்து மிக குறைந்த பாதையில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்காது.

    அதிக பாதையில் விலகி இருந்தால் ராகு சுபத்துவ படுத்த பட்டு குருவும் வலு இழக்காமல் இருப்பார். சனியோடு சேரும் குரு ஆன்மீக எண்ணத்தை கொடுப்பார். 

    மேஷ லக்னத்திற்கு குரு தசை (3ம் வீட்டில் குரு)


    மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் மிதுன வீடு. இங்கு குரு பகை பெறுகிறார். 3ம் வீட்டில் இருக்கும் போது தனது 9ம் வீடாகிய பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பார்.

    3ம் வீட்டில் இருந்து 7ம் இடத்தையும் 11ம் இடத்தையும் பார்ப்பார். வீடு கொடுத்தவன் புதன் உச்சமாக இருக்கும் பட்சத்தில் மிக நல்ல பலன்களை தருவார்.

    மூன்றாம் இடத்தில் ஒருவேளை ராகு சாரத்தில் இருந்தால் ராகுவுக்கு வீடு கொடுத்தவன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்ல பலன்கள் அமையும். எனவே 3ம் இடத்தில் குரு இருப்பது நல்லது.

    மேஷ லக்னத்திற்கு குரு தசை (4ம் வீட்டில் குரு)


    மேஷ லக்னத்திற்கு குரு தசை பற்றி பார்ப்போம். மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு சந்திரனின் கடக வீடு. சந்திரன் குருவின் நல்ல நண்பர். கடக வீட்டில் குரு உச்சம் அடைவார்.

    இங்கு 4ம் வீட்டில் இருந்தால் குரு உச்சமாகி 8,12ம் இடங்களை பார்வை செய்வார்.

    8,12ம் இடம் சுபத்துவம் அடைந்தால் கண்டிப்பாக அவர் குரு தசையில் வெளிநாடு, தூர தேசம் சென்று நல்ல நிலைக்கு வரக் கூடிய அமைப்பை உருவாக்கும். 

    5ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 5ம் வீடு சூரியனின் சிம்ம வீடு. குருவின் மிக நெருங்கிய நண்பரின் வீடு.

    இங்கு குரு இருப்பது மகா பெரிய யோகம் ஆகும். இங்கு குரு இருக்கும்போது 1,5,9ம் இடங்களை தொடர்பு கொள்வார்.

    எனவே 5ம் இடத்தில் உள்ள குரு லக்னத்தில் இருந்து பலன் செய்வதை விட மிக சிறப்பாக இந்த இடத்தில் இருந்து மிக நல்ல பலன்களை செய்வார். இங்கு இருப்பது மிக நல்லது.

    6ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு கன்னி வீடு. இது குருவின் பகை வீடு. லக்னத்தில் இருந்து 6இல் மறைகிரார்.

    இங்கு இவர் இருப்பது நல்ல அமைப்பு கிடையாது. குரு இங்கு மறையும் பொது குருவின் காரக நன்மைகள் கெடும். ஆண் வாரிசு இருக்காது.

    5ம் அதிபதி சூரியனையும் பார்க்க வேண்டும். இங்கு குரு பாவத்துவம் அடையாமல் இருக்க வேண்டும். ஒருவேளை சனியுடன் தொடர்பு பெற்றால் தர்ம கர்மாதிபதி யோகம் உருவாகும்.

    இந்த இணைவை ஒளி பொருந்திய சந்திரன் பார்த்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இங்கு லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும். 

    7ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 7ம் வீடு சுக்கிரனின் துலாம் வீடு. இங்கு குரு இருக்கும்போது சுபத்துவம் பெற்று லக்னத்தை பார்க்கிறார்.

    லக்னத்தை குரு பார்த்தாலே நல்ல அமைப்பு உருவாகி விடும். எனவே இங்கு குரு இருப்பது நல்ல பலன்கள் கிடைக்கும். இங்கு இவர் பகை வீடு என்று எல்லாம் பார்க்க வேண்டாம்.

    8ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 8ம் வீடு செவ்வாயின் இன்னொரு விருச்சிக வீடு. இங்கு குரு 8இல் மறைகிறார் என்றாலும் கூட தனக்கு பிடித்த நண்பரின் வீடு.

    எனவே ஓரளவு நன்றாக தான் இருக்கும். இங்கு 8ம் இடம் சுபத்துவம் பெற்று 12ம் இடத்தை பார்ப்பதால் வெளிநாடு, தூர தேசம் சென்று சம்பாதிக்கும் அமைப்பை உருவாக்கும். 

    9ம் வீட்டில் குரு


    மேஷ லக்னம் 9ம் வீடு குருவின் சொந்த வீடு. இங்கு குரு மூல திரிகோண அமைப்பை பெறுவார். ஆட்சி பலத்தை விட வலுவாக இருப்பார்.

    மிக அபாரமான நல்ல பலன்களை தருவார். இங்கு குரு இருந்தால் லக்னத்தை 5ம் பாரவையாய் லக்னத்தை பார்ப்பார். மிகவும் நல்ல அமைப்பு.

    எனவே எதையும் அனுபவிக்க கொடுத்து வைத்தவனாக இருப்பான். இங்கு இவர் தனித்து இருப்பது நல்லது. வக்கிரம் அடையாமலும் இருக்க வேண்டும்.

    ஒருவேளை நேருக்கு நேராக சூரியன் இருந்து குரு வக்கிரம் அடைந்தால் சூரியன் சுபத்துவம் பெற்று நல்ல அதிகாரம் மிக்க அமைப்பை உருவாகி நல்ல பலனை தரும்.

    10ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 10ம் வீடு என்பது சனியின் மகர வீடு. இங்கு குரு நீசம் அடைவார். நீசம் அடைந்தாலும் பெரிய கெடு பலன்கள் நடக்காது.

    நீசம் அடைந்தாலும் கேந்திரத்தில் தான் இருக்கிறார் என்ற ஒரு பலம் இருக்கும். இங்கு குரு வக்கிரம் அடைந்தாலோ பௌர்ணமி சந்திரன் பார்வை பெற்றாலோ இழந்த வலுவை திரும்ப பெறுவார்.

    நல்ல பலன்களை தருவார். இங்கு சுக்கிரன் அல்லது உச்ச செவ்வாயோடு இணைந்து இருந்தால் இன்னும் அபாரம். மிக சிறந்த நல்ல பலன்கள் அமையும்.

    அதே நேரத்தில் அந்த நீசம் பெற்ற குரு, சனி ராகுவோடு இணைய கூடாது.

    11ம் வீட்டில் குரு


    11ம் வீடு என்பது சனியின் கும்ப வீடு. இங்கு குரு இருக்கும்போது ஆன்மீக அமைப்பு உருவாக வாய்ப்பு உள்ளது.

    இங்கு இருக்கும் குரு 3,5,7ம் இடங்களை தொடர்பு கொள்வார். நல்ல மனைவி நல்ல அமைப்புகளை தருவார். எனவே 11ம் இடத்தில் குரு இருக்கலாம். நல்ல அமைப்பு தான்.

    12ம் வீட்டில் குரு


    மேஷ லக்னத்திற்கு 12ம் வீடு குருவின் சொந்த வீடான மீனம். இங்கு குரு வலிமையுடன் இருந்து 4,8ம் இடங்களை தொடர்பு கொள்வார்.

    எனவே 8,12ம் இடம் சுபத்துவம் என்ற முறையில் குரு தசையில் வெளிநாடு அமைப்பு உருவாகும். அதன் மூலம் வருமானம், பொருள் ஈட்ட வைப்பார்.


    பொறுப்புத் துறப்பு:
    இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.

    Post a Comment

    0 Comments