மேஷ லக்னத்திற்கு சந்திர தசை எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். இந்த லக்னத்திற்கு சந்திரன் 4ம் அதிபதியாக வருகிறார். ![]() |
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை |
மேஷ லக்னத்திற்கு சந்திரன்
4ம் இடம் என்பது தாய் ஸ்தானம். அம்மா, வீடு, வாகனம், சொத்து போன்றவற்றை குறிக்கும்.
மேஷ லக்னத்தின் லக்னாதிபதி செவ்வாய்க்கு சந்திரன் நண்பர் தான். ஆனால் சந்திரன் இரு வேறு சுப மற்றும் பாவ நிலைகளில் இருப்பார்.
வளர்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் என்ற நிலையில் இருப்பார். எனவே சந்திரன் நல்ல பலனை தர அதன் சுப நிலையையும் நாம் பார்க்க வேண்டும்.
இருந்தாலும் செவ்வாயின் நண்பர் என்ற முறையில் எந்த நிலையிலும் நல்ல பலன்களை தருவார்.
பொதுவாக சூரியனும் சந்திரனும் ஒளி கிரகங்கள். அவை வலிமை இழக்காமல் இருப்பது அவசியம்.
சந்திரன் தான் நம் மனதை ஆள்பவன். சந்திரன் தான் மனோ காரகன். அனைத்து கிரகங்களும் சந்திரன் வழியாக நம் மனதை கட்டுப்படுத்தி பலன் கொடுக்கின்றன.
நம் எண்ணங்களை வைத்து தான் நாம் செயல் படுகிறோம். நமக்கு உடல், உயிர் இருந்தால் மட்டும் போதாது.
மனம் நன்றாக இருந்தால் மட்டும் தான் நம்மால் நன்றாக இயங்க முடியும். எனவே சந்திரன் என்பது மிக முக்கியமான கிரகம்.
திடமான மனது, நன்றாக சிந்தித்து செயல்படும் திறமை இருக்க வேண்டுமென்றால் பாவ கிரக தொடர்பு இல்லாமல் சந்திரன் நன்றாக இருக்க வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கும், எதற்கும் கலங்காமல் திடமாக இருப்பதற்கும் சந்திரன் கெடாமல் இருப்பது மிக மிக அவசியம்.
சந்திரன் கெட்டு போய் இருக்கிறது என்பதை எப்படி பார்ப்பது? சந்திரன் 6,8,12இல் மறைந்து இருக்கும். அல்லது ராகு கேதுவோடு சேர்ந்து கிரகண அமைப்பில் இருக்கும்.
அல்லது சூரியனும் 8 பாகைக்குள் இணைந்து இருக்கும், அதாவது அமாவாசை சந்திரனாக இருக்கும். அப்படி இருந்தால் சந்திரன் கெட்டு விட்டது என்று கூறலாம்.
சந்திரனுக்கு பகை, நட்பு வீடுகள் கிடையாது. ஆனால் பகைவர், நண்பர்கள் என்பது வேறு.
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை எந்த பெரிய கெடுதல்கள் செய்து விடாது. நல்ல யோக தசை தான். சந்திரன் கெட்டால் நல்ல பலன்கள் குறைவு ஏற்படலாம்.
இந்த தசையில் அம்மா வழியில் நல்ல உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல் நலம் நன்றாக இருக்கும். நல்ல வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும்.
நல்ல வேலை, பயணங்கள் ஏற்படும். எல்லா மேஷ லக்ன காரர்களுக்கும் யோகம் வரும் என்று எதிர்பார்க்க கூடாது. அது இருக்கும் இடம், நிலையை பொறுத்து மாறுபடும்.
சரி இப்பொழுது சந்திரன் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க மேஷ லக்னத்திற்கு சந்திர தசை எப்படி இருக்கும் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
![]() |
12 வீடிலும் சந்திரன் இருக்க சந்திர தசை |
சந்திரன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதுதான் உங்களின் ராசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை (லக்னத்தில் சந்திரன்)
லக்னத்தில் சந்திரன் இருக்கும் போது மேஷ லக்னம் மேஷ ராசி ஆகி விடுகிறது. சந்திரன் லக்னத்தில் நண்பரின் வீட்டில் இருப்பது நல்ல மேன்மையான பலனை தரும்.
இந்த லக்னத்தை குரு அல்லது சுக்கிரன் பார்த்தால் நல்ல திடமான மனது, எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை அமைந்து விடும்.
சொன்னதை சொன்ன படி செய்யும் நபராக இருப்பார். செவ்வாயின் வீடு என்பதால் கோபமும் வரக் கூடிய நபராக ஆனால் நல்லவனாக இருப்பார்.
சந்திரன் பௌர்ணமி அமைப்பில் இருந்தால் இன்னும் சிறப்பான நல்ல பலனை தருவார்.
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை (2ல் சந்திரன்)
மேஷத்திற்கு 2ம் வீடு என்பது சுக்கிரனின் ரிஷப வீடு. இங்கு 4ம் அதிபதி சந்திரன் உச்சம் ஆவார்.
நல்ல தாய், நல்ல மனம் உடையவராக இருப்பார். எதையும் நீங்களே முடிவு எடுக்கும் நபராக இருப்பீர்.
தன்னுடைய 4ம் வீட்டிற்கு 11ம் இடத்தில் அதுவும் உச்சமாக இருப்பதால் 2ம் வீட்டு ஸ்தான பலனை முழுமையாக செய்வார். 2ம் வீடு குடும்ப, தன ஸ்தானம் ஆகும்.
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை (3ல் சந்திரன்)
இங்கு 3ம் வீடு என்பது புதனின் மிதுன வீடு. இங்கு சந்திரன் இருந்தால் மேஷ லக்னம், மிதுன ராசி ஆகும்.
சந்திரனுக்கு புதன் பிடித்த மகன், ஆனால் புதனுக்கு சந்திரன் பிடிக்காத தாய். ஆக தாயை பிடிக்காத மகனின் வீட்டில் அந்த தாய் இருக்கிறாள்.
எனவே அங்கு சந்திரன் இருப்பது புதனுக்கு எரிச்சல் வரும், ஆனால் சந்திரன் தன் மகனின் வீடு தானே என்று இருப்பார்.
இங்கு சந்திரன் ஒளி தன்மையுடன் ராகு கேது தொடர்பு இல்லாமல் இருந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
புதன் 6ம் அதிபதியாக இருப்பதால் மேஷ லக்னத்திற்கு சில தீமைகளை செய்யும். ஆனால் சந்திரன் மிதுன வீட்டில் இருக்கும்போது அந்த தீமைகள் நடைபெறாது.
ஏனெனில் மிதுன ராசி என்பதால் ராசி அதிபதி புதனாக வருவார். எனவே புதன் சாதகமற்ற பலனை தர மாட்டார்.
எனவே சந்திரன் 3இல் சுபத்துவம் பெற்று இருப்பது ஓரளவு நல்ல பலன்களை தரும்.
மேஷ லக்னத்திற்கு சந்திர தசை (4ல் சந்திரன்)
மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு கடக வீடு. சந்திரனின் வீடு. சந்திரன் அதே வீட்டில் ஆட்சி பெற்று இருப்பார். எனவே நல்ல பலன்களை தருவார்.
ராகு கேது தொடர்பு இருந்து விட கூடாது. ஆட்சி பெற்ற தன்மையில் இருக்கும்போது அந்த வீட்டு ஆதிபத்தியங்கள் முழுமையாக நடைபெறும்.
நல்ல வீடு, வாகன வசதிகளை தருவார். இங்கு சந்திரன் இருப்பது நல்ல மேன்மையான அமைப்பு.
5ம் வீட்டில் சந்திரன்
இங்கு 5ம் வீடு என்பது சூரியனின் சிம்ம வீடு. மேஷ லக்னம் சிம்ம ராசி ஆகும்.
4ம் அதிபதி 5ம் வீட்டில் இருக்கிறார் என்பது நல்ல அருமையான நிலை. சூரியன் நண்பர் தான் என்பதால் நல்ல வீட்டில் இருக்கிறார்.
எனவே அதன் வேலைகளை எந்த தடங்களும் இல்லாமல் நல்ல படியாக செய்யும்.
5ம் வீட்டு புத்திர ஸ்தானம் நல்ல படியாக அமையும். பூர்வ புண்ணியம், பூர்வீக சொத்து அனைத்தும் கிடைக்கும்.
6ம் வீட்டில் சந்திரன்
இந்த லக்னத்திற்கு 6ம் வீடு புதனின் உச்ச வீடு கன்னி. மேஷ லக்னம் கன்னி ராசி ஆகும். தன்னை பிடிக்காத மகனின் வீடு.
6ம் இடம் மறைவு. ஒளி கிரகங்கள் மறைய கூடாது. எனவே ஆதிபத்திய விசயங்கள் கிடைக்காது. புதன் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்து பார்க்க வேண்டும்.
புதன் 4ம் இடத்திற்கும் அதிபதி என்பதால் 4ம் இடத்தின் அம்மா அமைப்பை கெடுக்கும். ராகு கேது தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லது.
7ம் வீட்டில் சந்திரன்
இங்கு 7ம் வீடு என்பது சுக்கிரனின் துலாம் வீடு. மேஷ லக்னம் துலாம் ராசி ஆகும்.
சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் இருந்தால் அல்லது வளர்பிறை சந்திரனாக இருந்தால் 7ம் பார்வையை லக்னத்தை பார்த்து லக்னத்தை வலு படுத்தி மிக மேன்மையான அமைப்பை கொடுப்பார்.
அதுவும் குரு, சுக்கிரன் தொடர்பு பெற்றால் இன்னும் நல்ல பலன்களை சந்திர தசையில் தருவார்.
8ம் வீட்டில் சந்திரன்
மேஷ லக்னம் விருச்சிக ராசி. லக்னாதிபதி, ராசி அதிபதி இருவரும் செவ்வாய். இங்கு சந்திரன் 8ம் இடத்தில் மறைந்து நீசம் பெற்று இருப்பார்.
எனவே சந்திரனின் ஸ்தான பலத்தை முற்றிலும் இழப்பார். 4ம் அதிபதி ஸ்தான பலத்தை இழந்து மறைந்து இருக்கிறார்.
அப்போது சந்திரனின் கார்கத்துவம் அனைத்தும் அடிபடும். ஆனால் அது பௌர்ணமி சந்திரன் அல்லது குருவின் பார்வை பெற்று விட்டால் அனைத்தும் தலைகீழ் மாறிவிடும்.
சந்திரனின் நல்ல பலன்களை தந்து விடும். எனவே ஸ்தான பலத்தை இழப்பது முக்கியம் இல்லை.
அவர் சுபத்துவம் அடைந்து உள்ளாரா என்பதை கவனிக்க வேண்டும். உச்சம், ஆட்சி பெற்ற குரு பார்த்தாலோ பௌர்ணமி சந்திரன் ஆக இருந்தாலோ அனைத்து பலனும் மாறிவிடும்.
9ம் வீட்டில் சந்திரன்
இந்த லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு. ஆக மேஷ லக்னம் தனுசு ராசி ஆகும். சந்திரன் இருப்பது நண்பராகிய குருவின் வீடு.
என்ன தான் தன்னுடைய 4ம் வீட்டிற்கு 6இல் மறைந்தாலும் சுப கிரகத்தின் வீடு. பொதுவாகவே தனுசு வீட்டில் சந்திரன் இருப்பது நல்லது தான். எனவே நல்ல பலன்கள் கிடைக்கும்.
10ம் இடத்தில் சந்திரன்
இங்கு 10ம் வீடு சனியின் மகர வீடு. மேஷ லக்னம் மகர ராசி ஆகும். இங்கு சந்திரன் திக் பலத்தை இழப்பார் என்றாலும் இங்கு கேந்திர பலத்தை அடைவார்.
சந்திரன் ஒளி பொருந்திய நிலையில் இருந்தால் அல்லது சுபர் தொடர்பு பெற்றால் நல்ல பலன்களை தருவார்.
10ம் இடத்தில் சந்திரன் வரும்போது நீர் சார்ந்த தொழில்கள், பயணம் சார்ந்த தொழில்கள் ஏற்படலாம்.
11ம் இடத்தில் சந்திரன்
மேஷ லக்னம் 11ம் வீடு சனியின் கும்ப வீடு. மேஷ லக்னம் கும்ப ராசி ஆகும்.
4ம் அதிபதி 4ம் இடத்திற்கு 8ம் இடமாகிய 11இல் மறைந்து இருக்கிறது. அப்போது 4ம் இடத்தின் ஆதிபத்திய விசயங்களை செய்யாமல் 11ம் வீட்டை வலுப்படுத்தி அதன் பலன்களை செய்யும்.
எனவே 11இல் சந்திரன் இருப்பது ஓரளவு நல்ல பலன்களை தரும்.
12ம் வீட்டில் சந்திரன்
மேஷத்திற்கு 12ம் இடம் என்பது குருவின் மீன வீடு. மேஷ லக்னம் மீன ராசி ஆகும்.
இங்கு சந்திரன் இருக்கும்போது தனது 4ம் வீட்டிற்கு 9இல் இருக்கிறார், மற்றும் லக்னத்திற்கு 12இல் மறைகிறார்.
எனவே இங்கு சந்திரன் இருந்தால் பாதி நன்மைகள் நடக்கும். ஆனால் பாதி கெடுதல்கள் இருக்காது.
என்ன தான் இருந்தாலும் குருவின் வீடு என்பதால் தீமைகளை செய்ய மாட்டார். அதுவே அமாவாசை சந்திரன், ராகு சனி இணைவு பெற்று இருந்தால் கண்டிப்பாக கெடுதல்கள் நடக்கும்.
பாவத்துவம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்கள் நடக்காது. ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments