![]() |
கிரகங்களின் உச்ச வீடுகள் |
கிரகங்களின் ஆட்சி, பகை, உச்ச நீச்ச வீடுகள்
கிரகங்களின் பலத்தை அந்த கிரகம் அமரும் வீட்டின் மூலம் அறியலாம். கிரகங்களின் பலத்தை ஆட்சி, மூல திரிகோணம், திக் பலம், நட்பு, சமம், பகை, உச்ச நீச்ச வீடுகள் என்று பிரிக்கலாம்.
கிரகம் உச்சமாக இருந்தால் அந்த கிரகம் மிகவும் வலிமையுடன் 100% பலனை நமக்கு கொடுக்கும். அப்போது அதன் காரகத்துவம் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
கிரகம் மூலதிரிகோணம் வீட்டில் இருந்தால் 80% வலிமையாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஆட்சி வீட்டில் இருந்தால் 65%, நட்பு வீட்டில் 50%, சமம் வீட்டில் 35%, பகை வீட்டில் 25%, நீச்ச வீட்டில் 10% பலமாக இருக்கும்.
![]() |
கிரகங்களின் ஆட்சி வீடுகள் |
திக் பலம்
ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்கள் குறிப்பிட்ட வீடுகளில் இருக்கும் போது திக் பலத்தை அடையும். திக் பலம் என்பது லக்னத்தில் இருந்து கேந்திரத்தில் சில கிரகம் அமரும் போது அது திக் பலத்தை அடையும்.
லக்னத்தில் குரு, புதன் இருவரும் இருந்தாலும் 4ம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீட்டில் சனி இருந்தாலும் 10ம் வீட்டில் சூரியன், செவ்வாய் இருவரும் இருந்தாலும் திக் பலம் அடைவார்கள்.
இதுபோல கிரகங்கள் அமர்ந்தால் அவர்கள் சமம், பகை, நீசம் அடைந்து இருந்தாலும் அவர்கள் திக் பலம் அடைந்து பலம் பெறுவார்கள்.
![]() |
ராசிகளின் வீடுகள் |
சூரியனின் உச்ச நீச்ச வீடுகள்
சூரியன் சிம்ம வீட்டிற்கு உரியவர். அங்கு ஆட்சி பெறுவார். சூரியன் செவ்வாயின் வீடான மேஷ வீட்டில் உச்சம் அடைவார். துலாம் வீட்டில் நீசம் அடைவார்.
எல்லா கிரகமும் உச்சம் பெறும் வீட்டில் இருந்து நேர் எதிராக உள்ள 7ம் வீட்டில் தான் நீசம் அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சூரியன் சுக்கிரனுக்கும் சனிக்கும் பகைவர் ஆகும். அதே போல குரு, செவ்வாய், சந்திரனுக்கு நண்பர் ஆவார்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் எந்த வீட்டில் இருக்கிறார் என்று பார்த்து அதன் பலத்தை நிர்ணயிக்க வேண்டும்.
12 வீடுகளில் சூரியனின் பலம்
மேஷம் வீடு- உச்சம்
ரிஷபம் வீடு - பகை
மிதுனம் வீடு - சமம்
கடகம் வீடு - நட்பு
சிம்மம் வீடு - ஆட்சி, மூல திரிகோணம்
கன்னி வீடு - சமம்
துலாம் வீடு - நீசம்
விருச்சிகம் வீடு - நட்பு
தனுசு வீடு - நட்பு
மகரம் வீடு - பகை
கும்பம் வீடு - பகை
மீனம் வீடு - நட்பு
புதனின் உச்ச நீச்ச வீடுகள்
இவர் மிதுனம் மற்றும் கன்னி வீட்டிற்கு உரியவர் ஆவார். எனவே அந்த வீடுகளில் ஆட்சி பெறுவார். கன்னி வீட்டில் உச்சம் பெறுவார்.
புதன் மட்டுமே அதனுடைய வீட்டிலே உச்சம் அடையும். மற்ற கிரகங்கள் வேறு கிரகத்தின் வீட்டில் தான் உச்சம் அடையும். புதன் மீனம் வீட்டில் நீசம் அடைவார்.
புதனுக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் நண்பர்கள். சந்திரன் பகைவர்.
12 வீடுகளில் புதனின் பலம்
மேஷம் - சமம்
ரிஷபம் - நட்பு வீடு
மிதுனம் - ஆட்சி வீடு
கடகம் - பகை வீடு
சிம்மம் - நட்பு
கன்னி - ஆட்சி, உச்சம், மூல திரிகோணம்
துலாம் - நட்பு
விருச்சிகம் - சமம்
தனுசு - சமம்
மகரம் - சமம்
கும்பம் - சமம்
மீனம் - நீசம்
சுக்கிரனின் உச்ச நீச்ச வீடுகள்
இவர் ரிஷபம் மற்றும் துலாம் வீட்டிற்கு உரியவர் ஆவார். எனவே அந்த வீடுகளில் ஆட்சி பெறுவார். மீனம் வீட்டில் உச்சம் பெறுவார்.
சுக்கிரனுக்கு சந்திரன், சூரியன், குரு பகைவர் ஆகும். சனி, புதன் நட்பு கிரகம் ஆகும். இருந்தாலும் குருவின் மீனம் வீட்டில் உச்சமும் புதனின் கன்னி வீட்டில் நீசமும் அடைவார்.
12 வீடுகளில் சுக்கிரனின் பலம்
மேஷம் - சமம்
ரிஷபம் - ஆட்சி
மிதுனம் - நட்பு
கடகம் - பகை
சிம்மம் - பகை
கன்னி - நீசம்
துலாம் - ஆட்சி, மூல திரிகோணம்
விருச்சிகம் - சமம்
தனுசு - சமம்
மகரம் - நட்பு
கும்பம் - நட்பு
மீனம் - உச்சம்
குருவின் உச்ச நீச்ச வீடுகள்
குரு, தனுசு மற்றும் மீனம் வீட்டிற்கு உரியவர் ஆவார். எனவே அந்த வீடுகளில் ஆட்சி பெறுவார். கடகம் வீட்டில் உச்சம் பெறுவார். மகரம் வீட்டில் நீசம் பெறுவார்.
குருவுக்கு சுக்கிரன், புதன் இருவரும் பகைவர். செவ்வாய், சூரியன் நண்பர்கள்.
12 வீடுகளில் குருவின் பலம்
மேஷம் - நட்பு வீடு
ரிஷபம் - பகை வீடு
மிதுனம் - பகை வீடு
கடகம் - உச்சம்
சிம்மம் - நட்பு
கன்னி - பகை
துலாம் - பகை
விருச்சிகம் - நட்பு
தனுசு - ஆட்சி, மூல திரிகோணம்
மகரம் - நீசம்
கும்பம் - சமம்
மீனம் - ஆட்சி
செவ்வாயின் ஆட்சி பகை உச்ச நீச்ச வீடுகள்
இவர் மேஷம் மற்றும் விருச்சிகம் வீட்டிற்கு உரியவர் ஆவார். எனவே அந்த வீடுகளில் ஆட்சி பெறுவார்.
மகரம் வீட்டில் உச்சம் பெறுவார். கடகம் வீட்டில் நீசம் பெறுவார். செவ்வாய்க்கு புதன் பகைவர். சூரியனும் குருவும் நண்பர்கள்.
செவ்வாயின் பலம்
மேஷம் - ஆட்சி, மூல திரிகோணம்
ரிஷபம் - சமம்
மிதுனம் - பகை
கடகம் - நீசம்
சிம்மம் - நட்பு
கன்னி - பகை
துலாம் - சமம்
விருச்சிகம் - ஆட்சி
தனுசு - நட்பு
மகரம் - உச்சம்
கும்பம் - சமம்
மீனம் - நட்பு
சந்திரன் ஆட்சி உச்சம் பகை வீடுகள்
சந்திரன் கிரகம் கடகம் வீட்டிற்கு உரியவர் ஆவார். கடக வீட்டில் ஆட்சியும் ரிஷப வீட்டில் உச்சம் பெறுவார். விருச்சிக வீட்டில் நீசம் பெறுவார்.
சந்திரனின் பலம்
மேஷம் - சமம்
ரிஷபம் - உச்சம், மூல திரிகோணம்
மிதுனம் - நட்பு
கடகம் - ஆட்சி
சிம்மம் - நட்பு
கன்னி - நட்பு
துலாம் - சமம்
விருச்சிகம் - நீசம்
தனுசு - சமம்
மகரம் - சமம்
கும்பம் - சமம்
மீனம் - சமம்
சனியின் ஆட்சி உச்ச பகை வீடுகள்
இவர் மகரம் மற்றும் கும்பம் வீட்டிற்கு உரியவர் ஆவார். சனி துலாம் வீட்டில் உச்சம் அடையும். அதற்கு நேர் எதிரான மேஷம் வீட்டில் நீசம் அடைவார்.
சனிக்கு சந்திரன், சூரியன், செவ்வாய் பகைவர் ஆகும். சுக்கிரன், புதன் நண்பர்கள் ஆகும்.
12 வீடுகளில் சனியின் பலம்
மேஷம் - நீசம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - நட்பு
கடகம் - பகை
சிம்மம் - பகை
கன்னி - நட்பு
துலாம் - உச்சம்
விருச்சிகம் - பகை
தனுசு - சமம்
மகரம் - ஆட்சி
கும்பம் - ஆட்சி, மூல திரிகோணம்
மீனம் - சமம்
ராகு மற்றும் கேதுவின் ஆட்சி உச்சம் பகை வீடுகள்
ராகு, கேதுவுக்கு தனி வீடுகள் கிடையாது. அது இருக்கும் வீட்டின் அதிபதி போன்று செயல்படும்.
இருந்தாலும் ராகு, கேதுவுக்கும் உச்ச நீச்ச வீடுகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதனை இப்போது பார்க்கலாம். ராகு கேது இரண்டிற்கும் ஒரே உச்ச நீச்ச வீடுகள் தான்.
ராகு கேதுவின் பலம்
மேஷம் - பகை
ரிஷபம் - நீசம்
மிதுனம் - நட்பு
கடகம் - பகை
சிம்மம் - பகை
கன்னி - நட்பு
துலாம் - நட்பு
விருச்சிகம் - உச்சம்
தனுசு - நட்பு
மகரம் - நட்பு
கும்பம் - நட்பு
மீனம் - நட்பு
கிரகங்களின் உச்ச நீச்ச வீடுகள் அடையும் பாகை
அதே போல ஒவ்வொரு கிரகமும் துல்லியமாக எந்த பாகையில் உச்சம், நீசம் அடையும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 30 degree பாகைகள் இருக்கும். மொத்தமாக 12 வீட்டிற்கும் கூட்டி பார்த்தால் 360 பாகை வரும்.
அந்த 30 பாகையை வைத்து துல்லியமாக எந்த பாகையில் முழு உச்சம், நீச்சம் அடையும் என்று பார்க்கலாம்.
கிரகங்கள் | உச்சம் | நீசம் | பாகைகள் |
---|---|---|---|
சூரியன் | மேஷம் | துலாம் | 10 பாகை |
சந்திரன் | ரிஷபம் | விருச்சிகம் | 3 பாகை |
செவ்வாய் | மகரம் | கடகம் | 28 பாகை |
புதன் | கன்னி | மீனம் | 15 பாகை |
குரு | கடகம் | மகரம் | 5 பாகை |
சுக்கிரன் | மீனம் | கன்னி | 27 பாகை |
சனி | துலாம் | மேஷம் | 20 பாகை |
0 Comments