மேஷ லக்னத்திற்கு ராகு தசை எந்த மாதிரி பலன்களை தரும் என்று பொதுவாக காணலாம். ![]() |
மேஷ லக்னத்திற்கு ராகு தசை |
ராகு கேது பற்றிய தகவல்கள்
ராகு கேது என்று எந்த கோளும் கிடையாது. அவை நிழல் கிரகங்கள். எனவே மற்ற கிரகங்களுக்கு போன்று வீடுகள் கிடையாது.
ஆக ராகு என்பவர் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி போன்று செயல் படுவார்.
மேலும் ராகு அமர்ந்த நட்சத்திர அதிபதி, ராகுவை பார்த்த கிரகம் இதன் அடிப்படையிலும் வேலை செய்வார்.
எனவே ராகு லக்ன யோகர்கள் வீட்டில் அமர்வது நல்லது. ராகு என்பவர் எதையும் பிரம்மாண்டமாய் செய்ய கூடியவர்.
அது கெடுதலாக இருந்தாலும் சரி நன்மைகளாக இருந்தாலும் சரி. லக்னத்திற்கு எந்த அமைப்பில் இருக்கிறார் என்பதை பொறுத்து செய்வார்.
எப்பொழுதுமே ராகு நல்ல இடத்தில் இருந்தால் கேது சாதகமற்ற இடத்தில் இருப்பார். கேது நல்ல இடத்தில் இருந்தால் ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பார்.
எனவே ராகு கேது எதிரெதிர் தன்மை கொண்டவராக தான் இருப்பார்கள்.
பொதுவாக ராகு தசை 18 வருடங்கள் நடக்க கூடிய மூன்றாவது மிகப் பெரிய தசை. ராகு ஒரு இருளான பாவ கிரகம். சனியை போன்று செயல் படுவார் என்று மூல நூல்களில் உள்ளது.
ராகு நின்ற வீடு, மற்றும் அந்த வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருக்கிறார் என்பதை வைத்து மேஷ லக்னத்திற்கு ராகு தசை எப்படி இருக்கும் என்று கணக்கிட வேண்டும்.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை
![]() |
மேஷ லக்னம் ராகுவின் நிலை |
ராகு சுக்கிரன் அணி கிரகமாகவும், கேது குரு அணி கிரகமாகவும் எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே செவ்வாய் வீடான மேஷ லக்னத்திற்கு ராகு என்பவர் சனியை போல மிதமான நல்ல பலன்களை செய்வார்.
ராகு போக காரகன். உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்.
வெளியூர், வெளி மாநிலம், வெளி நாடு போய் பிழைக்க கூடிய நிலையை ராகு ஏற்படுத்துவார்.
திடீர் அதிர்ஷ்டம், லாட்டரி, Race, Share Market மூலம் வரும் பணம் மற்றும் குறுகிய காலத்தில் அதிக பணம் வரும் அனைத்து விசயங்களையும் ராகு தான் உண்டாக்குவார்.
ராகு தசையில் வேறு மதத்தினர், வேறு இனத்தவர் நட்பு தொடர்பு எல்லாம் கிடைக்க பெறும். இருந்தாலும் ராகு இருக்கும் வீட்டு அதிபதி எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்து இதன் பலன்கள் மாறுபடும்.
பொதுவாக ராகு உபஜெய ஸ்தானத்தில் 3,6,11 போன்ற இடங்களில் இருக்கும் போது நல்ல பலன்களை செய்வார் என்ற ஒரு விதி இருக்கிறது.
ராகு இருக்கும் வீட்டின் அதிபதி போன்று செயல்படுவதால், வீட்டு அதிபதி ஆட்சி உச்சம் போன்று வலு பெற்று இருந்தால் ராகு நல்ல பலன்களை செய்வார்.
அந்த வீட்டின் அதிபதி செய்யும் பலன்களுடன் சேர்த்து ராகுவின் காரகத்துவத்தையும் செய்வார்.
அதுவே ராகு நின்ற வீட்டு அதிபதி நீசம் பெற்றால் சுமாரான பலன்கள் தான் கிடைக்கும்.
அந்த நீசம் பெற்ற கிரகம் வளர்பிறை சந்திரன், குரு, சுக்கிரன் பார்வை பெற்று சுபத்துவம் பெற்று இருந்தால் ஓரளவு நல்ல பலன்களை எதிர்ப் பார்க்கலாம்.
அதேபோல ராகுவுடன் சுப கிரகங்கள் இணைந்தால், அந்த சுப கிரகங்களின் தசையில் பெரிய பலன்களை தராது.
ஆனால் அந்த சுப கிரகம் செய்ய வேண்டிய நல்ல பலன்கள், ராகு தசையில் நடக்கும்.
ராகு பாவ கிரகங்கள் சேர்க்கை இல்லாமல், சூரியன் சந்திரன் உடன் சேராமல் இருக்க வேண்டும்.
அப்படி சேர்ந்தால் அது கிரகணம் அமைப்பில் இருக்கும். அப்போது மந்தமான பலன்கள் தான் கிடைக்கும்.
ஒளி பொருந்திய சந்திரன் இருந்தால் ராகு தசையில் சந்திரனின் நல்ல பலன்களை இவர் எடுத்து செய்வார்.
ராகு என்பவர் 1,2,7,8ம் இடங்களாகிய குடும்பம், திருமணம், களத்திரம், மாங்கல்ய ஸ்தானங்களில் இருந்தால், மனைவி மற்றும் குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.
ஒரு வேளை சுப கிரகங்கள் பார்வை சேர்க்கை பெற்று இருந்தால் ஓரளவு தீய பலன்கள் குறையும்.
அதுவே பாவ கிரகங்கள் தொடர்பு பெற்றால் குடும்பத்தில் பெரிய சங்கடங்களை உருவாக்கி விடும்.
ராகு என்பவர் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் வீட்டில் இருக்கும் போது சுயமாக செயல் படுவார்.
அதேபோல 3,11ம் இடங்களில் இருக்கும் போது ஓரளவு நல்ல பலனை தரும்.
அதுவே 3,11ம் இடம் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் என்று வரும்போது அந்த இடத்தில் ராகு இருந்து குரு சுக்கிரனின் பார்வை பெற்று விட்டால் போதும், கொட்டி கொடுத்து விடுவார்.
ராஜ யோகத்தை அள்ளி கொடுப்பார். ஆனால் வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெற்று இருப்பது அவசியம்.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (லக்னத்தில் ராகு)
உங்கள் ஜாதக கட்டத்தில் ராகு எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்து மேஷ லக்னத்திற்கு ராகு தசை எப்படி இருக்கும் என்று பொதுவாக காணலாம்.
மேஷ லக்னம் செவ்வாயின் வீடு. மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் ராகு இருப்பது ஓரளவு நல்லது கிடையாது.
மேஷம், ரிஷபம், கடகம் கன்னி மகரம் வீட்டில் இருந்தால் நல்லது என்று சொல்லி இருப்போம். ஆனால் இங்கு மேஷ லக்னத்தில் ராகு இருப்பது லக்னத்தை கெடுக்கும்.
இங்கு ராகு இருக்கும்போது 10ம் இடத்தில் உச்ச செவ்வாய் இருந்தால் லக்னம் மற்றும் ராகுவை பார்ப்பதால் மிக பெரிய கோபக்காரனாக இருப்பான்.
ஆக லக்னத்தில் ராகு இருப்பது நல்ல பலன்களை செய்யாது. அதுவே குரு சுக்கிர தொடர்பு பெற்று இருந்தால் அல்லது விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் இருந்தால் நல்ல பலன்களை செய்வார்.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (2ம் வீட்டில் ராகு)
மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரன் (ரிஷபம்) வீடு. இங்கு ராகு இருப்பது மிக அருமையான அமைப்பு. வீடு கொடுத்த சுக்கிரன் நீசம் அடையாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
அதாவது துலாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி அல்லது மீன வீட்டில் உச்சம் பெற்று இருந்தால் மிகவும் நல்ல பலன்களை தரும்.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (3ம் வீட்டில் ராகு)
மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் (மிதுனம்) வீடு. இங்கு ராகு இருப்பது நல்லது அல்ல. 3,11ம் இடத்தில் இருக்கலாம் என்று பார்த்திருப்போம்.
அந்த விதி இங்கு செல்லாது. மேஷ லக்னத்தின் செவ்வாய்க்கு பரம எதிரி புதுனுடைய வீடு என்பதால் இங்கு இருக்கும் ராகு புதனை போல செயல் படுவதால் தீய பலன்களை கொடுப்பார்.
புதன் ஆட்சி உச்சம் பெற்று விட்டால் கூட நல்ல அமைப்பு கிடைக்காது. குரு சுக்கிர தொடர்பு பெற்றால் ஓரளவு நல்ல பலன்களை செய்ய வைப்பார்.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (4ம் வீட்டில் ராகு)
மேஷ லக்னத்திற்கு 4ம் வீடு சந்திரனின் (கடகம்) வீடு. இங்கு ராகு இருப்பது தாயை கெடுத்து நல்ல பலன்களை செய்யும்.
சந்திரனின் நிலையை பொறுத்து தாயின் நிலைமையை கணிக்க வேண்டும். சந்திரன் நல்ல நிலையில் இல்லாமல் ராகு 4இல் இருந்தால் தாய் இல்லாத அமைப்பை உருவாக்கும்.
ஆக 4இல் ராகு இருப்பது பெரிய மேன்மையை தந்து விடாது.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (5ம் வீட்டில் ராகு)
மேஷ லக்னத்திற்கு 5ம் வீடு சூரியனின் (சிம்மம்) வீடு. ராகுவுக்கு சூரியன் ஆகாதவர் என்பதால் இங்கு இருக்கும் ராகு எரிச்சல் அடைவார்.
சூரியன் உச்சமாக இருந்தால் கூட அதிகாரத்தை கெடுக்கும் அமைப்பு உருவாகும். ஆக சிம்மத்தில் ராகு இருப்பது நல்லதல்ல.
மேஷ லக்னத்திற்கு ராகு தசை (6ம் வீட்டில் ராகு)
மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு புதனின் (கன்னி) வீடு. இங்கு ராகு இருப்பது 6ம் இடத்தை கெடுத்து நல்ல பலன்களை செய்யும்.
6ம் இடமாகிய கடன், நோய், எதிரி போன்ற அமைப்பை கெடுத்து நல்ல அமைப்பை உருவாக்கும்.
புதன் பரிவர்த்தனை போன்ற அமைப்பில் இருந்து அல்லது குரு சுக்கிர தொடர்பு பெற்று இருந்தால் இன்னும் மேன்மையான நல்ல பலன்களை தரும்.
7ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 7ம் வீடு சுக்கிரனின் (துலாம்) வீடு. இங்கு ராகு இருப்பது பெரிய கெடுதல் வராது. இருந்தாலும் மனைவியை கெடுத்து பலன்களை செய்வார்.
அந்நிய மனைவி உருவாகும். களத்திர அமைப்புகளை தாம்பத்திய நிலையை கெடுத்து பலன்களை தரும் அமைப்பு.
8ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 8ம் வீடு செவ்வாயின் விருச்சிக வீடு. செவ்வாயின் ஸ்திர வீட்டில் ராகு இருப்பது நல்லது அல்ல.
இருந்தாலும் குரு சுக்கிர தொடர்பு பெறும் போது 8ம் இடம் சுபம் பெற்று வேறு விதமான நல்ல பலன்களை தரும். ஆக பொதுவாக விருச்சிக ராகு நல்ல பலன்களை தராது.
9ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் (தனுசு) வீடு. இங்கு ராகு இருப்பது நல்ல பலன்களை தரும்.
குருவின் வீட்டில் சுப தன்மை பெற்று இருக்கிறார். குரு வேறு இடத்தில் இருந்து இந்த ராகுவை பார்த்தால் நல்ல அமைப்பு உருவாகும்.
இங்கே ராகுவுடன் சனி சேர்ந்து குரு வேறு இடத்தில் இருந்து பார்த்து விட்டால் மிகவும் அருமையான நல்ல பலன்கள் கிடைக்கும்.
இங்கு சனியுடன் ராகு இருப்பது ஒரு விதத்தில் தர்ம கர்மாதிபதி அமைப்பு செயல் படும்.
10ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 10ம் வீடு சனியின் (மகரம்) வீடு. மகர வீட்டில் ராகு இருப்பது நல்ல அமைப்பு.
இங்கு உள்ள ராகு குரு, சுக்கிரன் தொடர்பு பெற்றால் நல்ல பலன் கிடைக்கும். அதுவே 10ம் இடத்தில் நீசம் பெற்ற குருவோடு ராகு இணைந்து விட்டால் அருமையான அமைப்பு.
குருவின் அனைத்து தன்மைகளையும் ராகு செய்வார். லக்னம் மற்றும் 4ம் இடம் நல்ல நிலையில் இருந்து விட்டால் போதும் ராகு தசையில் கோடிகளை கொட்டி விடுவார்.
ஆனால் இந்த நிலையில் குரு நீசம் என்பதால் குரு தசை நல்ல பலன்களை செய்யாது. சனி, செவ்வாய் பார்வை இருக்க கூடாது. சனி கூடவே சேர்க்கை பெற்று இருப்பது நல்லது.
11ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 11ம் இடம் சனியின் (கும்பம்) வீடு. சனியின் ஸ்திர வீடு. இங்கு ராகு இருப்பது நல்லதல்ல.
குரு, சுக்கிரன் தொடர்பு பெற்றால் ஓரளவு நல்லது. குறிப்பாக சனி, செவ்வாய் தொடர்பு பெற்று விட கூடாது. 3,11ம் இடமாக இருந்தாலும் சனி, செவ்வாய் தொடர்பு கூடாது.
அதே போல இந்த கும்ப ராகு சஷ்டாஷ்டகமாக இருக்கும் சந்திர வீட்டின் அதிபதி சந்திரனின் தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லது.
எனவே சந்திரனை தவிர்த்து குரு, சுக்கிரன் தொடர்பு பெற்றால் 11ம் இடத்தின் லாபத்தை நல்ல முறையில் தருவார்.
12ம் வீட்டில் ராகு
மேஷ லக்னத்திற்கு 12ம் வீடு குருவின் (மீனம்) வீடு. மேஷ லக்ன காரர்களுக்கு மீனத்தில் ராகு இருப்பது பெரிய தீமைகளை தந்து விட மாட்டார்.
குரு, சுக்கிர தொடர்பு பெறும் போது பங்குச் சந்தை லாபம், வெளிநாடு, வெளி மாநிலம் போன்ற அமைப்புகளை கொடுத்து நல்ல பலன்களை செய்வார். பாவத்துவம் பெற கூடாது.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments