banner 728*90

மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படிப் பட்ட பலனை தரும்

மேஷ லக்னத்திற்கு கேது தசை என்பது எந்த மாதிரியான பலனை தரும் என்று பொதுவாக காணலாம்.

மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி இருக்கும்
மேஷ லக்னத்திற்கு கேது தசை

    ராகு கேது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

    ராகு என்பது முழு இருள் தன்மை. கேது என்பது சூரியன் மறையும் நேரத்தில் இளஞ்சிவப்பு நிறம் தெரியும் அல்லவா! அது போன்ற தன்மை.

    ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவை செம்பாம்பு என்றும் அழைப்பர். ராகு கேது உருவம் இல்லை, அவை நிழல் கிரகம் என்பதை நினைவில் கொள்க. எனவே ராகு போன்று பெரிய பாவ தன்மையை கேது பெற்று இருப்பதில்லை.

    ராகுவை போல கேதுவை பாவ கிரகம் என்று பெரிதாக பார்க்க பட வில்லை. இருந்தாலும் கேது கெடுத்து தான் நல்லது செய்வார். எதிலும் தடையை ஏற்படுத்தி தான் நன்மையை கொடுப்பார்.

    கேது என்பவர் ஞான காரகன் என்று அழைக்கப் படுகிறது. அதுற்கு காரணம் பல இன்னல்களை கொடுத்து ஞானத்தை பெற வைப்பார். அதன் பின் நல்ல பலன்களை தருவார்.

    சில நேரங்களில் அனைத்தையும் துறந்து வாழ்க்கையே வேண்டாம் என்று துறவற வாழ்க்கையை மேற்கொள்ள வைப்பார்.

    பொதுவாகவே ராகு கேதுவுக்கு வக்கிரம் கிடையாது. ஆனால் எப்பொழுதுமே அவை இரண்டும் வக்கிர நிலையில் பின்னோக்கி செல்ல கூடிய கிரகங்கள் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

    மேஷ லக்னத்திற்கு கேது தசை

    மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி இருக்கும்
    மேஷ லக்னத்திற்கு கேது தசை

    பொதுவாக கேது தசை 7 வருடங்கள் நடக்கும். ராகு கேது மேஷ லக்னத்திற்கு பெரிய நன்மைகளை கொடுப்பதில்லை என்றாலும் கேது குரு அணி கிரகம் என்பதால் ராகுவை விட கொஞ்சம் அதிகமாக நல்ல பலன்களை எதிர்ப் பார்க்கலாம்.

    அது மட்டுமில்லாமல் ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் செயல் படுவார் என்ற ஒரு விதி உள்ளது. எனவே மேஷ லக்னத்திற்கு கேது தசை பெரிய கெடுதல்களை செய்யாது.

    கேது தசா புத்தியில் சில கேதுவின் காரகத்துவங்கள் நமது வாழ்க்கையில் நடக்கலாம்.

    தவறு செய்து விட்டு தானே உணர்ந்து புரிந்துக் கொள்ளும் தன்மை உருவாகும். கேது என்பவர் எல்லாம் எனக்குத் தான் என்ற சுயநல எண்ணம் இல்லாமல் எல்லாம் பொதுவானது என நினைக்க வைப்பவர்.

    எதிலும் பற்று இல்லாத நிலை உருவாகும். சில நேரங்களில் ஆன்மீகத்திற்குள் செல்ல வைப்பார். துறவறம் மேற்கொள்ள வைப்பார்.

    இயற்கை மூலிகை, ஆயுர்வேத மருத்துவம் போன்ற தொடர்புகளை ஏற்படுத்துவார். 

    கேது தான் மிகவும் வலிமை மிகுந்த கிரகம் என்று கூறப்படுகிறது. இந்த காரகத்துவத்துடன் சேர்த்து அவர் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை வைத்து பலன் அமையும்.

    பொதுவாக ராகு கேது அவர்கள் நின்ற வீட்டு அதிபதியை போன்றும் பார்வை பெற்ற கிரகங்களை போன்றும் செயல் படுவார்கள்.

    வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் குரு அணி கிரகத்தின் வீட்டில் அமர்ந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். கேது உபஜெய ஸ்தானங்களில் இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

    இருந்தாலும் அந்த வீட்டு அதிபதி யார் எந்த நிலையில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். சுப கிரகங்கள் குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் அவர்களின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    அதே நேரத்தில் மிகக் குறைந்த பாகையில் இணைந்தால் கிரகணம் அடைந்து இணைந்த கிரகம் வலிமை இழக்கும்.

    ஆனால் வலிமை இழந்த கிரகத்தின் பலன்களையும் சேர்த்து கேது தசையில் செய்து விடும். 

    அதேபோல பாவ கிரகங்கள் சேர்க்கை அல்லது பார்வை பெற்று விட கூடாது. அப்படி இணைந்தால் பாவ கிரகத்தின் தன்மையை செய்து விடும்.

    குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானத்தில் கேது அமரும்போது குடும்பத்தை விட்டு துறவு வாழ்க்கை போக வைக்கலாம். 

    கேது நன்றாக இருப்பவனுக்கு கஷ்டத்தையும், கஷ்ட நிலையில் இருப்பவனுக்கு நல்லதையும் செய்ய கூடியவர்.

    ராகு இருக்கும் இடத்தை கெடுப்பது போல கேது கெடுப்பதில்லை. கேது இருக்கும் இடத்தை வளர்ப்பார்.

    எனவே கேது, ராகுவை போன்று அபாயமான கிரகம் இல்லை. எடுத்துக்காட்டாக குருவுடன் கேது இணைந்தால் கேள யோகம் என்ற கோடீஸ்வர யோகத்தை கொடுப்பார்.

    அதுவே குருவுடன் ராகு சேர்ந்தால் அந்த குருவின் பலன்களை கெடுப்பார். அதே போல சுக்கிரன் கூட ராகு இணைந்தால் தாம்பத்திய சுகம் கிடைப்பதில்லை.

    அதுவே சுக்கிரன் கூட கேது இணைந்தால் தாம்பத்திய சுகம் முழுமையாக கிடைக்கிறது.

    உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளிலும் கேது இருக்க மேஷ லக்னத்திற்கு கேது தசை எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.

    மேஷ லக்னத்திற்கு கேது தசை (லக்னத்தில் கேது)

    லக்னத்தில் கேது இருப்பது நல்லது தான். ராகு தான் லக்னத்தில் இருக்க கூடாது. கேது இருக்கலாம்.

    எனவே கேது பெரிய கெடுதல்கள் தந்து விடாது. சுப கிரகங்கள் தொடர்பு இருந்தால் கூடுதல் நல்ல பலன்கள் உண்டாகும்.

    இங்கு செவ்வாயுடன் கேது இணைந்து இருந்தால் மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    லக்னாதிபதி பாவ கிரகம் ஆகி லக்னத்தில் கேதுவுடன் இணைந்து இருந்தால் நல்ல பலன்கள் தான் கிடைக்கும். ராகு தான் இருக்க கூடாது.

    எடுத்துக் காட்டாக லக்னத்தில் செவ்வாய் இருப்பது ரவுடி போன்ற கோபக் காரன், அதுவே கேது இணைந்தால் போலீஸ் கார கோபக் காரன்.

    அப்படியே பலனை மாற்றி விடும். அதுவே கேது, செவ்வாய், சனி போன்றவை சேர்ந்து இருக்க கூடாது.

    மேஷ லக்னத்திற்கு கேது தசை (2ம் வீட்டில் கேது)

    மேஷ லக்னத்திற்கு 2ம் வீடு சுக்கிரன் வீடு. இங்கு கேது இருப்பது பெரிய கெடுதல்களை தந்து விடாது.

    செவ்வாய், சனி தொடர்புகள் இருக்க கூடாது. 2ம் இட தனத்தை வளர்க்க கூடிய ஒரு அமைப்பு தான் உருவாகும். எனவே இங்கு சுப தொடர்பு பெற்று இருப்பது நல்லது.

    மேஷ லக்னத்திற்கு கேது தசை (3ம் வீட்டில் கேது)

    மேஷ லக்னத்திற்கு 3ம் வீடு புதனின் வீடு. 3, 11ம் இடத்தில் கேது இருப்பது நல்லது என்றாலும் அது செவ்வாய்க்கு ஆகாத புதனின் வீடு என்பதால் சில கெடுதல்களும் உருவாகும்.

    புதன் 6ம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் 6ம் இட தீய பலன்களை உருவாக்கும். அதே நேரத்தில் ஒரு சில நல்ல பலன்களும் கிடைக்கலாம்.

    இங்கு கேது இருப்பது அப்படியே புதன் தசை போன்று செயல்படும். குரு சுக்கிர தொடர்பு பெற்றால் ஓரளவு நன்மை கிடைக்கும்.

    மேஷ லக்னத்திற்கு கேது தசை (4ம் வீட்டில் கேது)

    மேஷ லக்னத்திற்கு 4ம் இடத்தில் உள்ள கேது ராகுவை போல கெடுக்காமல் தாயை பாதிப்பார்.

    கேந்திர கோணங்களில் ராகு கேது இருப்பது அந்த இடத்தை கெடுக்கும். இருந்தாலும் ராகுவை போல கேது கெடுக்க மாட்டார்.

    இங்கு ராகு இருந்தால் அம்மா இல்லாத நிலையும் கேது இருந்து அம்மாவை பிரிந்து வாழும் நிலையும் உருவாகலாம். எனவே ராகு போன்று பெரிய அமைப்பில் கெடுக்க மாட்டார்.

    கேது பாவத்துவம் அடைந்தால் கெடுதல் கூடுதலாக இருக்கும். சுப தொடர்பு பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.

    5ம் வீட்டில் கேது

    இங்கு 5ம் வீடு சூரியன் வீடு. ராகு கேதுவுக்கு சந்திரன், சூரியன் எதிரான கிரகங்கள் என்பதால் அவர்களின் வீட்டில் இருக்கும் போது பெரிய நன்மைகளை எதிர் பார்க்க முடியாது.

    5ம் இட புத்திர ஸ்தானத்தை ஓரளவு கெடுக்கும். ராகுவின் அளவுக்கு கெடுக்காது. சுப தொடர்புகள் பெற்றால் ஓரளவு மட்டும் கெடுதல்கள் இருக்கும். 

    6ம் வீட்டில் கேது

    மேஷ லக்னத்திற்கு 6ம் வீடு புதனின் வீடு. இங்கு கேது இருக்கவே கூடாது. 6ம் இடத்தின் பலன்களை வளர்ப்பார்.

    நோய், எதிரி, கடன் வம்பு வழக்கு போன்ற அமைப்புகளை வளர்ப்பார். புதனை போன்று செயல்படுவார்.

    செவ்வாய், சனி தொடர்புகள் இருந்தால் ஓரளவு நல்லது. 6ம் இட பலன்கள் குறையும். சுப கிரகங்கள் தொடர்பு பெற்றால் 6ம் இட பலன்கள் அதிகம் ஆகும். 

    7ம் வீட்டில் கேது

    மேஷ லக்னத்திற்கு 7ம் வீடு சுக்கிரன் வீடு. இங்கு கேது இருப்பது மனைவியை கெடுக்க மாட்டார். ஆனால் வேற்று இன பெண்ணை மணமுடிக்க வைப்பார்.

    ஆனால் ராகுவை போல மண வாழ்க்கையை கெடுக்க மாட்டார். எனவே இங்கு கேது இருப்பது ஓரளவு நல்ல அமைப்பை தரும்.

    8ம் வீட்டில் கேது

    இங்கு 8ம் வீட்டில் செவ்வாயின் வீட்டில் கேது இருப்பது லக்னாதிபதி போன்ற பலனை தரும்.

    8இல் ராகு இருப்பது ஆயுளை கெடுக்கும். ஆனால் கேது அந்த அளவுக்கு கெடுக்க மாட்டார்.

    குரு சுக்கிர தொடர்பு பெற்றால் நல்ல ஆயுள், நல்ல பலன்களை கண்டிப்பாக தருவார்.

    9ம் வீட்டில் கேது

    மேஷ லக்னத்திற்கு 9ம் வீடு குருவின் தனுசு வீடு. இங்கு கேது இருப்பது ஆன்மீக எண்ணங்களை கொடுப்பார்.

    பாக்கிய ஸ்தானத்தில் கேது இருப்பது மிகவும் நல்ல அமைப்பு. இங்கு ராகு கேது இருப்பது பற்றற்ற நிலையில் நல்ல பலன்களை தருவார்.

    10ம் வீட்டில் கேது

    மேஷ லக்னம் 10ம் வீடு சனியின் வீடு. இங்கு கேது இருப்பது நன்மை தான். சனியின் வீடுகள் கேதுவுக்கு பிடித்த வீடுகள்.

    இங்கு சனியுடன் சேர்ந்து இருப்பது சனி தசை நல்ல பலன்களை தரும். கேது தசை கொஞ்சம் கெடுதல் செய்யும்.

    சனி செவ்வாய் பார்வை இருக்க கூடாது. சுப கிரகங்கள் தொடர்பு பெற்று இருந்தால் நல்லது.

    11ம் வீட்டில் கேது

    மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு சனியின் கும்பம். இங்கு கேது இருப்பது மிகவும் நல்ல பலன்களை தரும்.

    லக்னாதிபதி செவ்வாய் வலு பெற்று இருந்தால் நல்ல மேன்மையான அமைப்பு. எனவே இங்கு இருப்பது நல்லது.

    12ம் வீட்டில் கேது

    12ம் வீடு குருவின் மீனம் வீடு. இங்கு கேது இருப்பது நல்லது தான். செவ்வாயின் நண்பர் வீடு. சுபரின் வீடு.

    பெரிய கெடு பலன்கள் நடக்காது. சுப தொடர்புகள் பெற்றால் மிகவும் நல்ல பலன்கள் தான் செய்யும்.


    பொறுப்புத் துறப்பு:
    இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.

    Post a Comment

    0 Comments