செவ்வாயின் வீடான மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை எப்படிப் பட்ட பலனை தரும் என்பதை இந்த பதிவில் காணலாம். ![]() |
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை |
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை
மேஷம் லக்னத்திற்கும் விருச்சிக லக்னத்திற்கும் செவ்வாய் தான் லக்னாதிபதியாக வருவார்.
எனவே மேஷ லக்னத்திற்கு செவ்வாய் கெடுதல்களை செய்ய மாட்டார் என்றாலும் அவர் ஒரு பாவ கிரகம் என்பதால் சில கெடுதல்களும் நடக்கும்.
அதே நேரத்தில் 8ம் இடமாகிய மறைவு ஸ்தானத்திற்கும் செவ்வாயே அதிபதியாக வருவதால் சில நேரங்களில் தீமைகளையும் செய்ய நேரிடும்.
எனவே செவ்வாய், மேஷ லக்னத்திற்கு 60% நன்மையை அளிக்க கூடியதாக இருக்கும். அதே போல செவ்வாய் 8ம் இடத்தோடு தொடர்பு பெற கூடாது.
எப்பொழுதுமே 6,8,12ம் அதிபதிகள் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவ நன்மைகள் கிடைத்தாலும் அதன் ஆதிபத்திய தீமைகளை கண்டிப்பாக செய்வார்கள்.
இங்கு மேஷ லக்னத்திற்கு செவ்வாய் வலுத்து இருந்தால் லக்னாதிபதி என்ற முறையில் நல்ல பலன்களையும் 8ம் அதிபதி என்ற முறையில் தீய பலன்களையும் செய்வார்.
எனவே செவ்வாய் இருக்கும் வீட்டை பொறுத்து அதன் பலத்தை பொறுத்து அதன் பலனை பார்க்க வேண்டும்.
செவ்வாயின் காரகத்துவம் என்ன என்பதை முந்தைய பதிவுகளில் படித்திருப்பீர்கள்.
வீரம் மிக்கவன், சண்டைக்கு அஞ்சாதவன், துணிந்து நிற்பவன், உடல் வலிமையுடன் இருப்பவன் செவ்வாய் நேரிடையாக வலுத்து இருப்பவன் ஆவான்.
செவ்வாய் ஒரு முக்கால் பாபர் ஆகும். எனவே செவ்வாய் ஆட்சி, உச்சம் போன்ற அமைப்பில் இருப்பது நல்ல பலன்களை தருவதில்லை.
அதுவே மறைமுக வலுவான சுபத்துவம் பெற்று இருப்பது நல்ல பலன்களை தரும்.
சுபத்துவம் என்பது இயற்கை சுப கிரகங்களின் (குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன்) வீடுகளில் அல்லது அவர்களின் சேர்க்கை/பார்வையில் இருக்க வேண்டும்.
அப்போது செவ்வாய் மறைமுக வலு பெற்று நன்மைகளை செய்வார். எனவே பாவ கிரகங்கள் நேரிடையாக வலு பெறாமல் மறைமுக வலு பெறுவது நல்லது.
சரி செவ்வாய் 12 வீடுகளிலும் இருக்க மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை எப்படிப் பட்ட பலன் தரும் என்பதை அறியலாம்.
உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்பது 1ம் இடம். அந்த இடத்தில் இருந்து கணக்கிட வேண்டும். இப்போது மேஷ லக்னத்திற்கு செவ்வாயின் பலனை பார்க்கலாம்.
![]() |
12 வீடுகளிலும் செவ்வாய் இருக்க செவ்வாய் தசை |
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை (லக்னத்தில் செவ்வாய்)
மேஷ லக்னத்திலேயே செவ்வாய் ஆட்சியாக இருப்பது இரண்டு விதமான நிலையை தரும்.
உடல் வலிமை இருக்கும். தைரிய சாலியாக இருப்பார். துறு துறுவென இருப்பார். அதே நேரத்தில் கோபக் காரனாக இருப்பார்.
அதுவே அந்த செவ்வாய் சுபத்துவம் பெறாமல் சனி, ராகு சேர்க்கை/பார்வை பெற்று பாவத்துவமாக இருந்தால் மிகுந்த கட்டுபடுத்த முடியாத கோபக் காரனாக இருப்பார்.
வன்முறையை தேடி போவான். ஆயுதங்களை கண்டால் எடுத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இருப்பான்.
செவ்வாய் சுபத்துவம் என்றால் கத்தரிக்கோல் எடுத்து துணியை வெட்டுவான், அல்லது அரிவாள் எடுத்து மரத்தை வெட்டுவான்.
பாவத்துவம் ஆனால் அல்லது நேர்வழு பெற்று ஆட்சி உச்சம் பெற்று இருந்தால் அடி, வெட்டு, குத்து என்று உயிரை எடுப்பவனாக இருப்பான்.
அடுத்தவனை தண்டிக்கும் குணம், இரக்க குணம் இல்லாத நிலையில் இருப்பான்.
அதுவே குரு சுக்கிரன் தொடர்பு பெற்று அந்த செவ்வாய் இருந்தால் அந்த கத்தி எடுத்து அந்த உயிரை காக்கும் மருத்துவராக இருப்பார். இதுதான் அந்த சுபத்துவ பாவத்துவ அமைப்பு.
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை (2ல் செவ்வாய்)
மேஷ லக்னத்திற்கு 2ம் இடம் சுக்கிரனின் வீடு. இது இயற்கை சுப கிரகத்தின் வீடு என்பதால் இது ஒரு நல்ல இடம்.
சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று இருந்து, அந்த சுக்கிரனின் வீட்டில் செவ்வாய் இருக்கும்போது நேரிடையாக சுபத்துவம் பெற்று அவர் நல்ல பலனை கொடுப்பார்.
அதுவே குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்றால் மிகப் பெரிய யோகம் அமையும். விளையாட்டு, மருத்துவம், கட்டிடம், பொறியியல் போன்ற துறைகளில் செழிப்பான வாழ்க்கை அமையும். முக்கியமாக சனி, ராகு தொடர்பு இருந்து விட கூடாது.
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை (3ல் செவ்வாய்)
மேஷ லக்னத்திற்கு 3ம் இடம் என்பது புதன் வீடாகிய மிதுனம் வீடு ஆகும். செவ்வாய்க்கும் புதனுக்கும் ஆகாது.
அதோடு இந்த வீடு செவ்வாயின் 8ம் வீட்டில் இருந்து 8ம் வீடாக வரும் என்பதால் நல்ல அமைப்பை தருவதில்லை.
ஆனால் மிகுந்த தீமைகளை செய்வார் என எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இங்கு வீடு கொடுத்த புதன் ஆட்சி, உச்சமாக இருந்தால் செவ்வாய் ஓரளவு நல்ல பலன்களை தருவார். சுபத்துவமாக இருந்தால் மிகுந்த நல்ல பலன்களை தருவார்.
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை (4ல் செவ்வாய்)
மேஷ லக்னத்திற்கு 4இல் கடக வீட்டில் (சந்திரன் வீடு) செவ்வாய் நீசம் ஆகும். இங்கு திக் பலம் இழந்து, நேர் வழுவையும் இழந்து உள்ளது.
அப்போது அந்த வீட்டின் ஆதிபத்திய கெடுதல்கள் இருக்கும். லக்னாதிபதி நீசம் அடைந்தாலும் லக்னத்தை குரு பார்த்தாலும் சூரியன் வலுவாக இருந்தாலும் ஓரளவு நல்ல அமைப்பு கிடைக்கும்.
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் தசை (5ல் செவ்வாய்)
5ம் இடத்தில் சிம்மத்தில் சூரியன் வீட்டில் செவ்வாய் இருக்கிறார். சூரியனின் மீது செவ்வாய்க்கு ஒரு நல்ல புரிதல் உள்ளது.
இதுவே சூரியன் லக்னத்தில் இருந்து செவ்வாய் 5இல் பரிவர்த்தனை பெற்றால் மிகுந்த நல்ல பலன்கள் கிடைக்கும்.
இந்த வீட்டில் செவ்வாய் இருப்பது குறைந்த அளவிலான ஒரு சுபத்துவத்தை பெறும். எனவே 5இல் செவ்வாய் இருப்பது நல்லது.
6ம் இடத்தில் செவ்வாய்
6ம் வீடு புதனின் கன்னி வீடு ஆகும். பொதுவாக பாவ கிரகங்கள் 6, 8 12இல் மறைவது நல்லது. இது செவ்வாய்க்கு ஆகாத புதனின் வீடு.
அதே நேரத்தில் செவ்வாயின் 8ம் பார்வையாக லக்னத்தை பார்க்கிறார். 6ம் வீட்டில் மறைந்து நின்று லக்னத்தை வலு படுத்துகிறார்.
எனவே கோவத்தை எங்கு காட்ட வேண்டுமோ அங்கு தான் காட்டுவார். எனவே 6ம் வீட்டில் செவ்வாய் இருப்பது நல்லது.
7ம் இடத்தில் செவ்வாய்
7ம் வீடு சுப கிரகமான சுக்கிரனின் துலாம் வீடு. இங்கிருக்கும் செவ்வாய் லக்னத்தை 7ம் பார்வையாக பார்ப்பார்.
எனவே நல்ல விஷயத்துக்காக கோவ படும் நபராக இருப்பார். நேர்மையான கோவமாக இருக்கும்.
தன்னை போலவே எல்லாரும் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இங்கு இருக்கும் செவ்வாய் நல்ல பலன்களை தரும்.
8ம் இடத்தில் செவ்வாய்
மேஷ லக்னத்திற்கு செவ்வாய் 8ம் இடத்தில் இருந்தால் அது செவ்வாயின் இன்னொரு வீடான விருச்சிக வீடு ஆகும்.
8இல் ஆட்சி ஆகி மறைந்து இருப்பார். பாவ கிரகம் மறைவது ஓரளவு நல்ல பலன்களை தரும்.
இங்கு செவ்வாய் பாவத்துவம் பெறாமல் சுபத்துவம் பெற்று இருக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த 8ம் வீட்டில் புதனின் கேட்டை நட்சத்திரம் சாரம் பெறாமல் இருக்க வேண்டும்.
அப்போது நல்ல பலன்களை தரும். அதே நேரத்தில் சனி ராகுவோடு சேர்க்கை பெற்றால் ஆயுள் கெட்டு போகும்.
அப்போது செவ்வாய் 2,3ம் இடங்களை பார்ப்பதால் தனம், குடும்பம், தைரியத்தை கெடுப்பார்.
9ம் வீட்டில் செவ்வாய்
இது குருவின் தனுசு வீடு. இது மிகவும் சுப வீடு என்பதால் இங்கு செவ்வாய் இருப்பது நல்லது.
அதே நேரத்தில் பாவ கிரகம் 9இல் இருந்தால் இருக்கும் இடத்தை கெடுக்கும். இருந்தாலும் குருவின் வீடு என்பதால் குருமங்கள யோகம் ஏற்பட்டு 80% நன்மையை கொடுக்கும்.
இந்த வீட்டில் செவ்வாயை சாந்தப் படுத்தி நல்ல பலன்கள் நடக்கும்.
10ம் வீட்டில் செவ்வாய்
10ம் வீடு இது சனியின் மகர வீடு. இங்கு செவ்வாய் உச்சம் பெற்று நேர் வழு பெறும்.
மற்ற கிரகங்களை பொறுத்து யுனிஃபார்ம் சர்விஸ் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிக கல் மனம் உடையவராக சுட்டு கொல்லுவதிலும் தண்டனை கொடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். சனி பார்த்து விட்டால் இன்னும் கொடூரம்.
அதே நேரத்தில் இந்த இடத்தில் குருவோடு சேர்ந்து இருந்தால் சுப வலிமை பெற்று அனைத்தும் தலை கீழாக மாறும்.
அப்போது மருத்துவர் ஆகி கத்தியை எடுத்து கிழிக்கும் அமைப்பை தரும். அதுவே குருவோடு சேர்ந்து இருந்து சனி பார்வை பெற்றால் மருத்துவரின் அடுத்த கட்ட நிலை, பொறியியல் போன்ற அமைப்பை தரும்.
சுபத்துவம் இல்லாமல் பாவத்துவம் பெற்றால் கெட்ட பலன்களை தரும்.
11ம் வீட்டில் செவ்வாய்
11ம் வீடு சனியின் கும்ப வீடு. வீடு கொடுத்த சனி வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்த வீட்டில் இருக்கும் செவ்வாய் ஓரளவு நல்ல பலன்களை தரும். பெரிய கெடுதல்கள் அமையாது.
12ம் வீட்டில் செவ்வாய்
12ம் வீடு குருவின் மீன வீடு. பாவ கிரகம் செவ்வாய் 12இல் மறைந்து இருக்கிறார்.
செவ்வாயின் கோபம், நிதானம் இல்லாத நிலை, முரட்டு தனம் அனைத்தும் மறைந்து விடும். குருவின் வீடு என்பதால் இங்கு செவ்வாய் அமர்வது நல்ல பலன்.
லக்னாதிபதி மறைய கூடாது என்று பொதுவான கருத்து இருந்தாலும் இங்கு செவ்வாய் பாவ கிரகம் என்பதால் லக்னத்தில் செவ்வாய் இருப்பதை விட 12இல் செவ்வாய் மறைந்து குருவின் வீட்டில் இருப்பது நல்லது.
எதையும் யோசித்து செயல்படுபவனாக இருப்பான். செவ்வாயின் முக்கால் பாவ குணங்கள் மறைந்து நல்ல குணங்கள் வெளிப்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்த ஜோதிட கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அல்லது கணிப்புகளின் நம்பகத் தன்மைக்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இங்கே உள்ள தகவல்கள் அனைத்தும் பல தரப் பட்ட ஊடகங்கள்/சொற்பொழிவுகள்/ஜோதிடர்கள்/செய்திகள் மற்றும் நாங்கள் கற்று தெரிந்த சில ஜோதிட அறிவுகளில் இருந்து தகவல்களை சேகரித்து இங்கே வழங்கப் பட்டுள்ளன. எங்களின் நோக்கம் ஜோதிட தகவல்களை வழங்குவது மட்டும் தான். எனவே பயனாளர்கள் இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதை பயன்படுத்தி கொள்வது முழுக்க முழுக்க பயனாளர்களின் பொறுப்பாகும்.
0 Comments